கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் இ-சேவை மையங்கள் மூடியே கிடப்பதால், சான்றிதழ்களைப் பெற விண்ணப்பிக்க முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் இ-சேவை மையங்கள் மூடியே கிடப்பதால், சான்றிதழ்களைப் பெற விண்ணப்பிக்க முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகாவிற்குட்பட்ட 17 ஊராட்சிகளைச் சேர்ந்த மக்கள், வருவாய் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ்கள், புதிய குடும்ப அட்டைப் பெறுவதற்கான விண்ணப்பப் பதிவுகள், நிலம் தொடர்பான சிட்டா, பட்டா அடங்கல்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு சார்ந்த சான்றிதழ்களைப் பெற நகர் பகுதியில் உள்ள வருவாய் வட்டாச்சியர் அலுவலகங்களுக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. இதனால், பொதுமக்களின் சிரமங்களை போக்க, பல கோடி ரூபாய் செலவில் இ-சேவை மையங்கள் அரசு சார்பில் கட்டப்பட்டன.
3 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டி முடிக்கப்பட்ட இ-சேவை மையக் கட்டிடங்கள் எதுவும் இதுவரை திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கின்றன. இதனால், எந்த அடிப்படை நோக்கத்தோடு இதுபோன்ற கிராமப்புற இ-சேவை துவக்கப்பட்டதோ, அதன் பயன்பாடு மக்களை சென்றடையவே இல்லை என பொதுமக்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர். வழக்கம் போல, அந்தந்த வருவாய் வட்டாச்சியர் அலுவலகங்களில் சான்றிதழ்கள் வேண்டி கிராமமக்கள் நாள் கணக்கில் அலைய வேண்டிய சூழலே நிலவி வருகிறது.
மேலும், ஆண்டு கணக்கில் மூடிக்கிடக்கும் இ-சேவை மையங்கள் பலவும் சமூகவிரோதிகளின் கூடாரமாகவும், மதுக்கூடமாகவும் மாறி வருகிறது. இது ஒருபுறம் இருக்க, பயன்படுத்தப்படாத பொருட்களை கொட்டி வைக்கும் குப்பைக்கிடங்காவும் இந்த புதிய கட்டிடங்களை, ஊராட்சி நிர்வாகங்களே மாற்றியுள்ளன. எனவே, தமிழக அரசு உடனடியாக இப்பிரச்சனையில் கவனம் செலுத்தி கிராமப்புற இ-சேவை மையக் கட்டிடங்களை செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பதே கிராமப்புற மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.