கோவை அனுவாவி சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் இருந்த இட்லி மாவை, ஒற்றை காட்டு யானை ரசித்து ருசித்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.
கோவை: கோவை அனுவாவி சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் இருந்த இட்லி மாவை, ஒற்றை காட்டு யானை ரசித்து ருசித்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.
கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான அனுவாவி சுப்பிரமணியர் திருக்கோவில் மலைப்பகுதி, பொன்னூத்து அம்மன் கோவில் மலைப்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வசித்து வருகின்றன. இவைகள் அவ்வப்போது மலையடிவாரத்திலுள்ள ஊருக்குள் புகுந்து விளைநிலங்கள் மற்றும் வீடுகளைச் சேதப்படுத்தியும், அங்குள்ள உணவுப் பொருட்களை தின்றும் வருகின்றன. மேலும், உயிர்ச்சேதமும் ஏற்படுத்துகின்றன. யானைகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க வனத்துறையினர் இரவு பகல் பாராமல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அனுவாவி சுப்பிரமணியர் திருக்கோவில் மலையடிவாரத்திலுள்ள ஸ்ரீ லலிதாம்பிகை அம்மன் கோவில் உள்ளது. கடந்த 19-ம் தேதி அதிகாலை 2 மணியளவில் மலையில் இருந்து இறங்கி வந்த காட்டு யானை ஒன்று அம்மன் கோயில் கேட்டை உடைத்து உள்ளே சென்றது. அங்குள்ள சமையல் அறைக்கு சென்ற அந்த யானை, பாத்திரத்தில் அரைத்து வைத்திருந்த இட்லி மாவை முழுவதுமாக தின்று தீர்த்தது. மாவு காலியானவுடன் அருகிலுள்ள ஸ்டோர் ரூம்மை திறக்க முயன்றது. ஆனால், அது முடியாததால், அங்கிருந்து திரும்பிய யானை கோவிலின் பின் வழியாக மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. ஒற்றை யானையின் இந்த உணவுப் போராட்டம் கோவில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியது.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, யானையின் நடமாட்டம் குறித்து அறிந்த பெரிய தடாகம் பகுதி மக்கள் மாலை 6 மணியளவிலேயே வீட்டிற்குள் முடங்கி விடுகின்றனர். மாலை வேலைகளில் யாரும் வெளியே நடமாடுவதில்லை. கோவிலுக்கும் செல்வதில்லை. தொடர்ந்து, 3 நாட்களாகக் கோவை வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதால் யானைகள் மீண்டும் ஊருக்கு வரவில்லை.