திருப்பூரில் பாறைக்குழியில் குளிக்கச் சென்ற மூன்று பள்ளி மாணவர்கள் பலி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பாறைக்குழியில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பாறைக்குழியில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 



பல்லடத்தை அடுத்த மங்கலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சுதர்சன், சமீர்கான், மனோகர் மற்றும் சுபாஷ் ஆகியோர் 11ம் வகுப்பு பயின்று வருகின்றனர். தேர்வுக்காகப் பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் நால்வரும் தங்கள் நண்பர் மூவருடன் வேலம்பாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழிக்கு குளிக்கச் சென்றனர். 

நீரில் இறங்கிக் குளித்த பொழுது சுதர்சன்,சமீர் மற்றும் மனோகர் மூவரும் ஒன்றன் பின் ஒருவராக நீரில் மூழ்கினர். அதனைப் பார்த்த அவர்களது நண்பர்கள் உடனடியாக மேலே வந்து அவர்களை காப்பாற்றுமாரு கூச்சலிட்டனர். ஆனால் நீரில் மூழ்கிய மூவரும் உயிரிழந்தனர். 

இதனையடுத்து, அப்பகுதிக்கு வந்த பொதுமக்கள் மங்கலம் காவல் நிலையம் மற்றும் பல்லடம் தீயணைப்பு துறையினருக்குத் தகவல் அளித்தனர். பின்னர் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் நீரில் மூழ்கி இறந்த மூன்று மாணவர்களில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வந்து மூன்று மாணவர்கள் பாறைக்குழியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...