கோவை புலியகுளம் பகுதியில் உள்ள இரண்டு வீடுகளுக்குள் புகுந்த மன நிலை பாதிக்கப்பட்ட வடமாநில இளைஞரைப் பிடித்த பொதுமக்கள் அவரைக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
கோவை : கோவை புலியகுளம் பகுதியில் உள்ள இரண்டு வீடுகளுக்குள் புகுந்த மன நிலை பாதிக்கப்பட்ட வடமாநில இளைஞரைப் பிடித்த பொதுமக்கள் அவரைக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த துர்கா தாஸின் மகன் சோபன் தாஸ் (22).மன நிலை பாதிக்கப்பட்ட இவர், இன்று கணேசபுரம் பகுதியில் உள்ள வீட்டின் கழிவறைக்குள் நுழைந்தார். திடிரென சந்தேகத்திற்கு இடமாக கழிவறைக்குள் புகுந்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து விசாரித்து ராமநாதபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலிசார் விசாரணை செய்ததில், இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. இதனால் வட மாநில இளைஞரிடம் கைரேகைகள் வாங்கி போலிசார் அனுப்பிவிட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் பெரியார் நகர் பகுதியில் உள்ள வீடுகளிலும் நுழைந்துள்ளார். வடமாநில இளைஞர் ஒருவர் வீடுகளுக்குள் புகுந்த சம்பவம் புலியகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.