திருப்பூரில் கல்லூரி மாணவ, மாணவிகளின் கள்ளச்சாரய விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
திருப்பூர் : திருப்பூரில் கல்லூரி மாணவ, மாணவிகளின் கள்ளச்சாரய விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
திருப்பூர் மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் கள்ளச்சாரய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்தப் பேரணியானது திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது. பேரணியில் கள்ளச்சாரயம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறும், விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியும் ஊர்வலமாகச் சென்றனர்.