மேட்டுப்பாளையம் வந்தடைந்த புதிப்பிக்கப்பட்ட உதகை மலை ரயில் என்ஜின்

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் புதுப்பிக்கப்பட்ட உதகை மலை ரயில் என்ஜின் மேட்டுப்பாளையம் கொண்டு வரப்பட்டது.

கோவை : திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் புதுப்பிக்கப்பட்ட உதகை மலை ரயில் என்ஜின் மேட்டுப்பாளையம் கொண்டு வரப்பட்டது. 



கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி நீலகிரி மலைரயில் இயக்கப்பட்டு வருகிறது. உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த இம்மலை ரயிலில் சென்று, நீலகிரி மலையின் இயற்கை அழகைக் கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். செங்குத்தான மலைக்காடுகள் வழியே பயணிக்கும் இம்மலை ரயிலை இயக்க மொத்தம் ஆறு என்ஜின்கள் உள்ளன. இந்த என்ஜின்கள் ஒவ்வொன்றும் அதன் பயன்பாட்டிற்கு ஏற்ப சுழற்சி முறையில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் இருந்து திருச்சியில் உள்ள பொன்மலை ரயில்வே பணிமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பழுது பார்க்கப்பட்டுப் புதுப்பிக்கப்படும்.

அதன்படி, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பராமரிப்பு பணிகளுக்காக திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்ட மலை ரயில் என்ஜின் புதுப்பிக்கப்பட்டு இன்று மேட்டுப்பாளையம் ரயில்நிலையம் வந்தடைந்தது. சாலை மார்க்கமாக கனரக வாகனம் மூலம் ஏற்றி வரப்பட்ட இம்மலை ரயில் என்ஜினை ராட்சத கிரேனின் உதவியோடு, அதன் இருப்புப் பாதையில் இறக்கி வைக்கப்படும் பணிகள் நடைபெற்றன.

அண்மைக்காலமாக, நீலகிரி மலை ரயில் என்ஜினில் அடிக்கடி கோளாறுகள் ஏற்பட்டு பயணத்தின் நடுவே நடுக்காட்டில் நின்றுவிடும் சம்பவங்கள் சுற்றுலா பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது. தற்போது, முற்றிலும் பழுது நீக்கப்பட்டு புதுபிக்கப்பட்டுள்ள மலை ரயில் என்ஜின் மேட்டுப்பாளையம் வந்தடைந்துள்ளது. கோடை சீசன் தொடங்க உள்ள நிலையில், மலை ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகமாகும் என்பதால், ஏற்கனவே கோடைக்கால சிறப்பு மலைரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், தற்போது இதன் என்ஜின்கள் மற்றும் ரயில் பெட்டிகள் புதுப்பிக்கும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...