கோவை தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது : தமிழிசை

கோவை மாவட்டம் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி வருவதாக பா.ஜ.க., மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை : கோவை மாவட்டம் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி வருவதாக பா.ஜ.க., மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட பா.ஜ.க. தலைவர் நந்தகுமார் வீட்டில் நேற்று முன்தினம் அதிகாலை மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தினர். இதில், அவரது கார் பலத்த சேதமடைந்தது. இந்த நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பா.ஜ.க. மாநில தலைவர் தமிழசை சவுந்தரராஜன், மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன், மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மாநில செயலாளர் எஸ்.ஆர். சேகர், மாவட்ட தலைவர் நந்தகுமார், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.



இதனிடையே, போராட்டத்தில் பங்கேற்ற தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பா.ஜ.க., தொண்டர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. இதுவரை மாவட்ட தலைவர் வீட்டில் காரை எரித்த நபர்கள் யாரையும் கைது செய்யவில்லை. கடந்த 7-ம் தேதி மாவட்ட அலுவலகத்தில் தாக்கப்பட்டது குறித்து உண்மையான குற்றவாளிகளை போலீசார் கைது செய்யவில்லை. கோவை தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது. முதல் தாக்குதல் நடத்திய போதே நடவடிக்கை எடுத்திருந்தால் இது தொடர்ந்து இருக்காது. போலீசார் மேலும் காலம் தாழ்த்தினால் அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம். ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் சேருமாறு தொடர்ந்து குறுஞ்செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை," என்றார். 



Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...