ஆணவக் கொலைக்கு மார்தட்டும் சாதி வெறி கும்பல் : மவுனம் காக்கும் தமிழக அரசு

கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி காதல் மறுப்பு திருமணம் செய்துகொண்ட சங்கர் உடுமலை பேட்டையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு கவுசல்யாவின் தந்தை, தாய் உட்பட 11 பேரை கைது செய்தனர்.

கோவை : கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி காதல் மறுப்பு திருமணம் செய்துகொண்ட சங்கர் உடுமலை பேட்டையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு கவுசல்யாவின் தந்தை, தாய் உட்பட 11 பேரை கைது செய்தனர். 

திருப்பூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 6 பேருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு அனைத்துத் தரப்பு மக்களிடையேயும் வரவேற்பைப் பெற்றது. தன்னம்பிக்கை, தளராத மனம் கொண்ட கவுசல்யா மெல்ல மெல்ல இந்தக் கொடூர தாக்குதலில் இருந்து விடுபட்டு, சங்கர் சமூக நீதி அறக்கட்டளையை தொடங்கி பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார். 

இந்த ஆணவக் கொலையை சில சாதி சங்கங்கள் பெருமையாகவும், அவ்வாறு கொலை செய்பவர்களை சாதியின் போராளிகளாகவும் சித்தரித்துக் கொண்டிருக்கின்றனர். இரண்டு சாதி சங்கங்களில் இருந்து கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமிக்கு காசோலை வழங்கப்பட்டுள்ளது. அதோடு, எவ்வித உதவிக்கும் தங்களை அணுகுமாறு அந்த சாதி சங்க உறுப்பினர்கள் அன்னலட்சுமியிடம் கூறிச் சென்றனர். மேலும், அதனை சமூக வலைத்தளங்களில் பெருமையாக பதிவு செய்துள்ளனர். பசும்பொன் தேசிய கழகத்தைச் சேர்ந்தவர்கள், கவுசல்யாவின் தந்தையான சின்னசாமி குடும்பத்திற்கு ரூ.1,26,000 வழங்கினர். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்த நிலையில், மேலும், ஒரு சாதி சங்கத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கியுள்ளனர். இந்த சாதி சங்கத்தைச் சேர்ந்தவர்களும் பணம் வழங்கியதை பெருமையாக பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்து வருகின்றனர். இதை ஒரு கோலாகல விழாவாகவே கொண்டாடினர் என்று கூட சொல்லி விட முடியும். 



ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இந்திய அரசிடம் வலியுறுத்தியும், கொலை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்த பின்னரும், இவ்வகையான குற்றங்களை சாதி வெறியர்கள் கவுரவமாகவே கருதி வருகின்றனர். 

திராவிடத்தை அடிப்படையாகக் கொண்டு ஆட்சியமைத்துள்ள தமிழக அரசு இந்த விஷயத்தில் மவுனம் சாதிப்பது சாதி மறுப்பாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...