கோவையில் அடுத்த 4 நாட்களுக்கு வெயிலுக்கு வாய்ப்புள்ளதாக வேளாண் பல்கலையின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவையில் அடுத்த 4 நாட்களுக்கு வெயிலுக்கு வாய்ப்புள்ளதாக வேளாண் பல்கலையின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "கோவையில் கடந்த வாரம் பெய்த மழையின் அளவு சராசரியாக 40 மி.மீ வரை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக தென்னை மரங்களுக்குத் தேவையான நீர் கிடைத்துள்ளது.
அடுத்த நான்கு நாட்களைப் பொறுத்த வரையில் கோவையில் வானம் தெளிவாக இருக்கும். காலை நேரங்களில் 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. இரவு நேரங்களில் 23 முதல் 24 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகக்கூடும்.
திருப்பூரில் நாளை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஈரோடு மற்றும் உதகையைப் பொறுத்தவரையில் மழைக்கான குறைவு. கோவையை பொறுத்த வரையில் 10-ல் இருந்து 12 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது. கடந்த வாரம் பெய்த மழையால் விவசாயிகள் மிகிழ்ச்சியில் உள்ள நிலையில் அடுத்த அறுவடைக்குத் தயாராக நிலங்களை உழவு செய்ய இந்த மழை கை கொடுத்துள்ளது.
தற்போது உள்ள ஈரப்பதத்தை பயன்படுத்தி நிலங்களை உழவு செய்யலாம். அதே நேரத்தில் தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் 200 மி.மீ மழை கடந்த முறை பெய்துள்ளதால் அங்கு நிலத்தடி நீர் மட்டும் உயர வாய்ப்புள்ளது. ஆனால், கோவையில் 40 மி.மீ மழை மட்டுமே பெய்த காரணத்தினால் நிலத்தடி நீர் மட்டும் உயர வாய்ப்பு குறைவு." என்றார்.