பலத்த மழையால் விசைத்தறிக்கூடம் இடிந்து விபத்து

திருப்பூர் மாவட்டத்தில் நேற்றிரவு பெய்த பலத்த மழையால் தனியாருக்கு சொந்தமான விசைத்தறிக்கூடம் இடிந்து விபத்து ஏற்பட்டது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நேற்றிரவு பெய்த பலத்த மழையால் தனியாருக்கு சொந்தமான விசைத்தறிக்கூடம் இடிந்து விபத்து ஏற்பட்டது.



பல்லடம் அருகே கரடிவாவிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(50). அதே பகுதியில் விசைத்தறித் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு கரடிவாவி பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. கிருஷ்ணசாமியின் விசைத்தறிக் கூடத்தின் மேற்கூரைகள் பறந்து, சுவர்கள் இடிந்தன. .மேலும் கூடத்தில் இருந்த விசைத்தறிகள், துணி வகைகள் சேதமடைந்தன. 



இது குறித்து கிருஷ்ணசாமி கூறுகையில், “எனக்கு சுமார் மூன்று லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அரசு உரிய இழப்பீடு வழங்கினால் மட்டுமே இத்தொழிலை மேற்கொண்டு நடத்த முடியும்.இந்த விபத்தால் நானும் என் குடும்பத்தினரும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம்.” என்றார். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...