கோவை மாநகராட்சியின் 2018-19ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வெளியீடு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 2018-2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட நிதிநிலை அறிக்கையினை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் இன்று மாநகராட்சி கூட்டரங்கில் வெளியிட்டார்.

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சியின் 2018-2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட நிதிநிலை அறிக்கையினை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் இன்று மாநகராட்சி கூட்டரங்கில் வெளியிட்டார்.

அந்த நிதி நிலை அறிக்கையின் படி, பொதுநிதி வருவாய் ரூ.890 கோடியாக உள்ளது. அதில் செலவு ரூ.882 கோடியாகும். குடிநீர் வடிகால் நிதி வருவாய் ரூ.353 கோடியாக உள்ளது. அதில் செலவும் நிகர மதிப்பாக உள்ளது. ஆரம்பக் கல்வியின் வருவாய் ரூ.30 கோடியாக உள்ளது. அதில் செலவு ரூ.215 கோடியாகும். எனவே, வரும் நிதியாண்டுக்கான மொத்தம் வருவாயாக சுமார் ரூ.1274 கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுமார் ரூ.1257 கோடியாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாநகராட்சி ஆணையாளர் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நடப்பு ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் பொது நிதி, குடிநீர் விநியோகம், வடிகால் நிதி மற்றும் ஆரம்ப கல்வி நிதிக்கான மொத்த வரவினம் ரூ.1274.91 கோடி. மொத்த செலவினம் ரூ.1257.17 கோடி. நிகர உபரி ரூ.17.74 கோடி.

சென்ற ஆண்டு 2017-18-ன் வரவு செலவு திருத்திய திட்ட மதிப்பீட்டில் பொது நிதி, குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் நிதி மற்றும் ஆரம்பக் கல்வி நிதிக்கான மொத்த வரவினம் ரூ.957.24 கோடி. மொத்த செலவினம் ரூ.951.46 கோடி. நிகர உபரி ரூ.5.78 கோடி.

அரசின் அனைத்துத் திட்டங்களும் மற்றும் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளான குடிநீர், வடிகால் வாய்க்கால் பணிகள் முன்னுரிமைத் திட்டங்களாக செயல்படுத்தப்படும். சென்ற ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்று வரும் பணிகளும், ஸ்மார்ட் சிட்டி, தூய்மை பாரத இயக்கம் திட்டங்களும், பசுமைப் பகுதிகள் அமைத்தல், சூரிய மின்சக்தி நிலையங்கள், சர்வதேவச தரத்திலான ஹாக்கி விளையாட்டுத் தளம் போன்ற திட்டங்கள் முன்மாதிரி திட்டங்களாகும்.

'அம்ருட்' திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே மிகப்பெரிய அளவில் 24 மணி நேரமும் தங்குதடையின்றி குடிநீர் வழங்கும் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக 3 முதல் 4 மாதங்களில் முற்றிலும் மக்கிவிடும் தன்மையுடைய உயிரி பைகள் அறிமுகப்படுத்தப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. இப்பைகள் உணவகங்கள், வியாபார நிறுவனங்கள் முதலிய தொழில் நிறுவனங்களில் உபயோகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...