வீரப்பனின் சகோதரருக்கு கோவையில் சிகிச்சை

சுமார் 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் வீரப்பனின் சகோதரருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால், அவருக்கு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


கோவை: சுமார் 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் வீரப்பனின் சகோதரருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால், அவருக்கு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொலை வழக்கு தொடர்பாக கடந்த 1987-ம் ஆண்டு ஜூலை 28-ம் தேதி வீரப்பனின் மூத்த சகோதரர் மாத்தையன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த 1997-ம் ஆண்டில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். அவரது மேல்முறையீட்டு மனு கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில், தன்னை விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில், தமிழக அரசு தனக்குள்ள அரசியல் அமைப்பு சட்ட அதிகாரத்தை பயன்படுத்தி அவரை விடுதலை செய்யலாம் என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த நிலையில், இன்று காலை 7.45 மணியளவில் அவருக்கு திடீரென நெஞ்சு வலி மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டது. தொடர்ந்து, அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து மனித உரிமைகள் வழக்கறிஞர் ச.பாலமுருகன் கூறுகையில், "ஆதரவற்ற நிலையில் இருக்கும் மாத்தையன் விடுதலை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தும் மாநில அரசு மவுனம் காப்பது வேதனையளிக்கிறது.

விசாரணை சிறை வாசியாக மூன்றாண்டுகள், தண்டனை சிறைவாசியாக இருபத்தி இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார்.

ஆயுள் தண்டனை சிறை வாசிகளை பத்து அல்லது பதினான்கு ஆண்டுக்குப் பின் விடுதலை செய்வது முன் விடுதலை (Premature release) ஆகும். இந்த வகை விடுதலையில் கொடிய குற்றம், மத கலவரம், ஆதாய கொலை, கொள்ளை என சில பாகுபாடுகளை பிரித்து அது போன்ற சிறைவாசிகளை அரசு விடுதலை செய்யாமல் உள்ளது. அவரது வயது முதிர்வு மற்றும் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு மாநில அரசு அவரை விடுதலை செய்ய வேண்டும். இதற்காக அனைத்து மனித உரிமைகள் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து மாநில அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளோம்." என்றார்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...