திருநங்கை கல்கி இயக்கிய குறும்படம் வெளியீடு

எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான திருநங்கை கல்கி சுப்ரமணியம் இயக்கிய குறும்படம் கோவையில் நேற்று வெளியிடப்பட்டது.

கோவை: எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான திருநங்கை கல்கி சுப்ரமணியம் இயக்கிய குறும்படம் கோவையில் நேற்று வெளியிடப்பட்டது.



கல்கி சுப்ரமணியம் பல்வேறு கவிதைகள் மற்றும் கட்டுரைகளை எழுதி வருகிறார். அவரது ஆறு கவிதைகளை 'வடு' என்ற குறும்படமாக இயற்றியுள்ளார். அந்த குறும்படம் நேற்று கோவை அண்ணா சிலை அருகே உள்ள தனியார் அரங்கில் வெளியிடப்பட்டது. கல்கி இயற்றிய அம்மா, ஓங்கி காய்த்தது, வரம்கொடு, விதியை எழுதினேன், குரி அறுத்தேன் மற்றும் ஈழம் போன்ற கவிதைத் தொகுப்புகளில் இருந்து இந்த குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அன்றாட வாழ்வில் திருநங்கைகள் சந்திக்கும் பிரச்சனைகளை இந்த குறும்படம் பிரதிபலித்தது.



"இன்னும் பலர் திருநங்கைகளை புரிந்து கொள்ளாமல் இருப்பதே அவர்களின் வாழ்க்கைச் சூழல் பாதிப்படைவதற்கான முக்கிய காரணமாக உள்ளது. இது மாற வேண்டும். எழுத்தில் இருந்து காணொளியாக உருவெடுக்கும் போது அது பார்வையாளர்களின் உள்ளத்தில் தாங்கும் என்று தோன்றியது. அதன் காரணமாகவே இந்த குறும்படம் இயற்றப்பட்டது." என்று கல்கி கூறினார்

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...