நாளை முதல் திரையரங்குகள் வழக்கம்போல இயங்கும்

நாளை முதல் அனைத்து திரையரங்குகளும் இயங்கும் என தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

நாளை முதல் அனைத்து திரையரங்குகளும் இயங்கும் என தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

கேளிக்கை வரியை ரத்து செய்யக் கோரி சென்னையைத் தவிர தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள், கடந்த 16-ம் தேதியில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினர். இதனால், திரையரங்குகள் வெறிச்சோடி காணப்பட்டன. இதைத்தொடர்ந்து, கடந்த 20-ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் சந்தித்து, கேளிக்கை வரி 8 சதவீதத்தை முழுவதுமாக நீக்க வேண்டும், வருடத்துக்கு ஒருமுறை உரிமத்தைப் புதுப்பிக்கும் முறையை மாற்றி 3 வருடத்துக்கு ஒருமுறை புதுப்பித்தால் போதும் எனக் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். 

முதலமைச்சருடனான இந்தச் சந்திப்பிற்கு பிறகும், திரையரங்கு உரிமையாளர்களின் போராட்டம் தொடர்ந்தது. இந்த நிலையில், நாளை முதல் அனைத்து தியேட்டர்களும் இயங்கும் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது :- 8 சதவீத கேளிக்கை வரி ரத்து மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து தலைமை செயலகத்தில் அமைச்சர் உடனான சந்திப்பின் போது உடன்பாடு ஏற்பட்டதையடுத்து நாளை (23-ம் தேதி) முதல் திரையரங்குகள் இயங்கும். மேலும் எந்தெந்த தியேட்டர்களில் எந்த படம் உள்ளதோ அந்த திரையரங்கில் சினிமா காட்சிகள் இடம் பெறும். எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றுவதாக அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளனர், என்றார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...