திருப்பூரில் இடியுடன் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

திருப்பூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலவிய சீதோஷண நிலையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலவிய சீதோஷண நிலையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.



கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே திருப்பூரில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வெளியில் நடமாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மாலை குளிர்காற்று வீசியது. சிறிது நேரத்தில் தூறலாக ஆரம்பித்த மழை, பின்னர் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் வேகமாகப் பெய்ய ஆரம்பித்தது. இதனால், வாகனங்கள் சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்கினர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த மழையின் காரணமாக திருப்பூரில் நிலவி வந்த கோடைக்கால சூழல் மாறி குளிர்காற்று வீசத் துவங்கியது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர். 

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...