சிறார்கள் மோட்டார் வாகனங்களை ஓட்டினால் பெற்றோர்கள் மீது கடும் நடவடிக்கை : கோவை போக்குவரத்து ஆணையர் பேட்டி

18 வயதுக்கு குறைவானவர்கள் மோட்டர் வாகனங்களை ஓட்டினால், அவர்களது பெற்றோர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர துணை ஆணையாளர் (போக்குவரத்து) சுஜித் குமார் தெரிவித்துள்ளார்.

கோவை : 18 வயதுக்கு குறைவானவர்கள் மோட்டர் வாகனங்களை ஓட்டினால், அவர்களது பெற்றோர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர துணை ஆணையாளர் (போக்குவரத்து) சுஜித் குமார் தெரிவித்துள்ளார். 

மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு -3-இன் படி வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கக்கூடாது. அதைப்போல, பிரிவு 4-இன் படி 18 வயதிற்கும் கீழ் உள்ள சிறுவர்கள் வாகனத்தை இயக்கக்கூடாது. இந்த விதியை மீறினால் ரூ. 1,000 அபராதம் அல்லது 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும். இந்த நிலையில், போக்குவரத்து விதிகளை மீறி ஓட்டுநர் உரிமம் இல்லாத 18 வயதிற்கும் கீழ் உள்ள சிறுவர்களை, வாகனங்கள் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்கள் மீதும், வாகன உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த அதிரடியான உத்தரவு சென்னையைத் தொடர்ந்து, கோவையிலும் தற்போது அமலுக்கு வந்துள்ளது. கோவை மாநகரில் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டுவது அதிகரித்துள்ளது. இதில், முக்கிய சாலைகளில் அதிவேகத்தில் வாகனம் ஓட்டும் சிறுவர்களால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல கோரிக்கைகளும் எழுந்தன. ஏற்கனவே, வழக்கமாக போலீசார் நடத்தும் வாகன தணிக்கையில் வீட்டு வேலையாக செல்கிறேன். ஒருசிலர் வேலைக்கு சென்ற தங்களது பெற்றோரை அழைத்து வர நாள்தோறும் இருசக்கர வாகனத்தை பயன்படுத்துகிறேன் உள்ளிட்ட பல காரணங்களை தெரிவிக்கின்றனர். 

பின்னர், காவல்துறையினர் சிறுவர்களின் பெற்றோர்களை அழைத்து அறிவுரை கூறுவதும் வாடிக்கையாக இருந்தது. ஆனால், தற்போது சட்டப்படி பாரபட்சமற்ற நடவடிக்கைகள் எடுக்கப்போவதாக கோவை மாநகர போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் (போக்குவரத்து) சுஜித்குமார் கூறியதாவது :- தற்போது, கட்டாயமாக சென்னையைப் போல கோவையிலும் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டக்கூடாது. விதியை மீறி சிறுவர்கள் வாகனங்களை ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதேபோல, வாகன உரிமையாளர் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். பள்ளிவிடுமுறை நாட்கள் வரும் நிலையில், சிறுவர்கள் மோட்டார் வாகனம் ஓட்டுவதை கட்டுப்படுத்துவதன் மூலம் விபத்துகளை தடுக்கலாம், இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...