கேரளாவின் மாநிலப் பழமாக பலாப்பழம் அறிவிப்பு

கேரளா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ பழமாக பலாப்பழம் அறிவிக்கப்பட்டதையடுத்து, அதனை நாடு முழுவதும் பிரபலப்படுத்தும் முயற்சியில் அம்மாநில அரசு இறங்கியுள்ளது.

கேரளா: கேரளா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ பழமாக பலாப்பழம் அறிவிக்கப்பட்டதையடுத்து, அதனை நாடு முழுவதும் பிரபலப்படுத்தும் முயற்சியில் அம்மாநில அரசு இறங்கியுள்ளது. 

சட்டசபையில் உரையாற்றிய கேரள வேளாண்துறை அமைச்சர் வி.எஸ். சுனில்குமார் இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும், பலாப்பழத்தை நாடு முழுவதிலும் மட்டுமின்றி, அதன்தரம் குறித்து உலகம் முழுவதிலும் பிரபலப்படுத்த வேண்டும். இதனால், கேரளா மிகுந்த பயனடையும், என்றார். கேரள மாநிலம் ஆண்டுக்கு 30 கோடிக்கும் அதிகமான பலாப்பழங்களை உற்பத்தி செய்து வருகிறது. எவ்வித உரமும் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் இந்தப் பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. இதனால், கேரள பலா விவசாயிகள் மிகுந்த லாபமடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

இதற்கு முன் யானை, கனிக்கோனா மலர், முத்து சிப்பி மீன் ஆகியவற்றையும் கேரளா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ பொருட்களாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...