தமிழ்நாட்டில் 0.98 சதவீதமே பயிர் சாகுபடி செய்யப்படுவதாக வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கே. ராமசாமி தெரிவித்துள்ளார்.
கோவை: தமிழ்நாட்டில் 0.98 சதவீதமே பயிர் சாகுபடி செய்யப்படுவதாக வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கே. ராமசாமி தெரிவித்துள்ளார்.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பலகலைக் கழக விதை மையத்தில் இன்று 4-வது ஆண்டு விழா பயிலரங்கு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கே. ராமசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு விதை சங்கத்தின் செயலாளர் காளிதாஸ் பேசுகையில், "ஒவ்வொரு ஆண்டும் வேளாண் பலகலையின் உதவியுடன் 1,30,000 மெட்ரிக் டன் எடையுள்ள விதைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விதைகள் வேறுபடலாம், ஆனால் தரம் என்றும் நன்றாகவே உள்ளது. கால நிலைக்கு ஏற்ப பயிர்களை விளைவிக்கும் வகையில் மாற்று விதைகளை வேளாண் பல்கலை தயாரித்துள்ளது." என்றார்.

தொடர்ந்து, வேளாண் பல்கலை.,யின் துணை வேந்தர் பேசுகையில், "தமிழ்நாட்டில் பயிர் சாகுபடி தற்போது 0.98 சதவீதம் தான் உள்ளது. மழை இல்லாததால், விவசாயிகளுக்கு நல்ல தரமான விதைகளை வழங்குவதற்கு விதை மையத்தை நான் கேட்டுக்கொள்கிறேன். 29.7 சதவீத தண்ணீர் தொழிற்சாலைகள் பயன்படுத்துகின்றன. தண்ணீரை மறு சுழற்சி முறையில் நாம் பயன்படுத்த வேண்டும். அப்போது தான் விவசாயத்திற்குத் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுக்க முடியும். " என்றார்.