30 ஆண்டுகளாகியும் ஊதிய உயர்வு இல்லை: குமுறலில் வனத்துறை தோட்ட காவலர்கள்

தமிழக அரசின் சமூக வனத்துறையில் 30 ஆண்டுகளாக பணியாற்றும் தோட்ட காவலர்களுக்கு ஊதிய உயர்வு, பணி உயர்வு வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


கோவை: தமிழக அரசின் சமூக வனத்துறையில் 30 ஆண்டுகளாக பணியாற்றும் தோட்ட காவலர்களுக்கு ஊதிய உயர்வு, பணி உயர்வு வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழக அரசின் வனத்துறையில், சமூக வன பாதுகாப்பு காடுகளை உருவாக தொடங்கப்பட்ட இந்த துறையில் காவலர்கள் பணியமர்த்தப்பட்டனர். தமிழகம் முழுவதும் இதில் சுமார் 512 மிகை பணி தோட்ட காவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.



தரிசாக உள்ள மலைக் குன்றுகள் மற்றும் தனியார் ஒத்துழைப்புடன் அவரவர் இடங்களில் நாற்றுகளை வைத்து சமூக காடுகளை உருவாக்குவதே இத்துறையின் நோக்கம். இந்த துறை தொடங்கப்பட்டது முதல், இதுவரை தோட்ட காவலர்களாக பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பதவி உயர்வோ அல்லது ஊதிய உயர்வோ வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மத்திய நாற்றங்கால் பண்ணையில் வனம் சார்ந்த மர நாற்றுகளை வைத்து அதனை பாதுகாத்து, வனப்பகுதிகளிலும் பள்ளி கல்லூரி வளாகங்களில் நட இவர்கள் மேற்கொள்ளப்படும் பணி கடந்த 32 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், எங்கள் வாழ்வில் இன்னும் பசுமை திரும்பவில்லை என்று குற்றம்சாட்டும் தோட்ட காவலர்கள், பணி உயர்வுக்கான தமிழக அரசு ஆனை 46 வெளியிடப்பட்டு நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும் 200 பேருக்கு மட்டும் பணி உயர்வினை பெயரளவில் வழங்கிவிட்டு மீதமுள்ள 300 பேரை புறக்கணித்துவிட்டதாக கூறியுள்ளனர்.

தோட்ட காவலர்கள், சமையல்காரர்கள், ஓட்டுநர்கள் என 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் நிலையில் அவர்களின் மாத வருமானம் ரூ.7 ஆயிரத்தைக் கூட தாண்டுவதில்லை. இதனால் அந்த தொழிலாளர்களின் குடும்பமே வறுமையுள்ளது.

இந்த சூழலில், ஊதிய உயர்வு மற்றும் பணி உயர்வை தமிழக அரசு விரைந்து வழங்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...