குரங்கணி தீ விபத்து: கோவையில் சிகிச்சை பெற்று வந்த பெண் பலி

குரங்கணி தீ விபத்தில் படுகாயமடைந்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கோவை: குரங்கணி தீ விபத்தில் படுகாயமடைந்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் கடந்த 11-ம் தேதி ஏற்பட்ட காட்டு தீயில் சிக்கி மலையேற்ற பயிற்சிக்காக சென்ற 17 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இந்த தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களுக்கு மதுரை, தேனி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தீ விபத்தில் சிக்கிய சென்னையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ (32) என்பவர் கடந்த 12-ம் தேதி கோவையை சேர்ந்த தனியார் மருத்துவமனையின் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக கோவை கொண்டு வரப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

60 சதவீத தீக்காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு கடந்த 10 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கபட்டுவந்தது. இந்நிலையில் இன்று காலை ஜெய்ஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுவரை குரங்கணி தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...