கோவையில் மரக்கன்றுகளை நடவு செய்து அரசு பள்ளி மாணவர்கள் வன நாள் கொண்டாடினர்.
கோவை: கோவையில் மரக்கன்றுகளை நடவு செய்து அரசு பள்ளி மாணவர்கள் வன நாள் கொண்டாடினர்.
ஆண்டுதோறும் மார்ச் 21-ம் நாள் உலக வன நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று சீரநாயக்கன்பாளையம் பகுதியில் அரசு பள்ளி செயல்பட்டு வரும் அரசு பலி மாணவர்கள் மரக்கன்றுகளை நடவு செய்து வன நாள் கொண்டாடினர்.

சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அப்பள்ளியின் தலைமையாசிரியர், உலக வன நிதி மைய உறுப்பினர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நெல்லி, நாவல், போன்ற மரக்கன்றுகளை பள்ளி மைதானத்திலும், கிராமப் பகுதியிலும் நடவு செய்யப்பட்டது.

இது குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், "வளர்ந்து வரும் கோவை மாவட்டம் சிறுவாணி மற்றும் பவானி போன்ற நீராதாரங்களை நம்பியே உள்ளது. இந்த ஆறுகள் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் இருந்து உற்பத்தியாகின்றன. அதனால், மேற்குத்தொடர்ச்சி மலைகளை பாதுகாப்பது மிகவும் அவசியமானதாகும். இன்றைய நமது செயல் நாளைய தலைமுறைக்கு உதவும் வண்ணம் இருக்க வேண்டும். இந்த பள்ளி மற்ற பள்ளிகளுக்கு உதாரணமாக விளங்கி வருகிறது. மரக்கன்றுகளை நடவு செய்வது பட்டாம்பூச்சிகள் நிச்சயமாக ஈர்க்கும். மேலும், மாணவர்களை இந்த செயலில் ஈடுபடுத்துவது அவர்கள் சூழல் மற்றும் வாழ்க்கை சுழற்சியை பற்றி அறிந்து கொள்ள உதவும்." என்றார்.