மாற்றுத்திறனாளி என்ற காரணத்திற்காக வேட்பு மனுவை நிராகரிக்கக் கூடாது என உத்தரவு

கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் போட்டியிடும் மாற்றுத் திறனாளியின் வேட்பு மனுக்களை, அவர்களது குறைபாடுகளை காரணமாகக் கொண்டு நிராகரிக்கக் கூடாது எனக் கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் போட்டியிடும் மாற்றுத் திறனாளியின் வேட்பு மனுக்களை, அவர்களது குறைபாடுகளை காரணமாகக் கொண்டு நிராகரிக்கக் கூடாது எனக் கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 



கூட்டுறவு சங்கத் தேர்தலில் போட்டியிடும் மாற்று திறனாளிகளின் வேட்பு மனுக்களை நிராகரிக்கக் கூடாது, தேர்தல்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகளை மாவட்ட கூட்டுறவு தேர்தல் அலுவலர்களுக்கு உரிய அறிவுறுத்தல் சுற்றறிக்கை அனுப்புமாறு கடந்த 16-ம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆணையர் எம். ராஜேந்திரனிடம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மனு கொடுக்கச் சென்றனர். 



அப்போது, அங்கு வந்த பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை ஒருமையில் பேசியதாகவும், அவர்களால் படிக்க முடியாது எனக் கூறி அவமதித்து வேட்புமனுவை நிராகரித்ததாகவும் கூட்டுறவுத்துறை ஆணையர் ராஜேந்திரன் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மாற்றுத் திறனாளிகள் தேனாம்பேட்டையில் உள்ள கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆணையர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கூட்டுறவு தேர்தல் ஆணைய சிறப்பு அதிகாரி சந்திரசேகரன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பார்வையற்றவர்கள் உள்பட மாற்றுத் திறனாளிகள் அனைவரும் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என ஆணையர் எழுத்துப்பூர்வ உறுதியளித்ததையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனிடையே, வெளியூர் சென்றிருந்த கூட்டுறவுத் தேர்தல் ஆணையர் எம். ராஜேந்திரன் பாதிக்கப்பட்ட பார்வையற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...