பல்லடம் அருகே ஆசிட் ஏற்றிவந்த லாரி சிறை பிடிப்பு..!

பல்லடம் அருகே ஆசிட் ஏற்றிவந்த லாரியை சிறை பிடித்த விவசாயிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் : பல்லடம் அருகே ஆசிட் ஏற்றிவந்த லாரியை சிறை பிடித்த விவசாயிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள கள்ளிமேடு அருகே அமைந்துள்ளது ஓம் சக்தி நகர். இப்பகுதியில் குடியிருந்து வரும் கருப்புசாமி என்பவர் சல்ப்யூரிக் ஆசிட்டை மொத்தமாக வாங்கி சலவை பட்டறைகளுக்கு விற்பனை செய்து வருகிறார். 

மேலும், லாரி மூலம் வாங்கப்படும் ஆசிட்டை சேமித்து வைத்து பின்னர் யூரியாவுடன் கலந்து விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் யூரியாவை கருப்புசாமி முறைகேடாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

மேலும், அந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரினால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் புகார் மனு அளித்தனர்.  இந்த நிலையில், இன்று லாரி மூலம் சல்ப்யூரிக் ஆசிட்டை கொண்டுவந்து நிரப்பும் பணியில் கருப்புசாமி ஈடுபட்டிருந்தார். இது குறித்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் வராததால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி விவசாயிகள், ஆசிட் ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பின்னர், சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பல்லடம் வட்டாட்சியர் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து விவசாயிகள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தில் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...