பழைய சரித்திரம் கோவையில் திரும்பி விடக் கூடாது - சி.பி.ராதாகிருஷ்ணன்
கோவை: பா.ஜ.க.வின் கோவை மாவட்ட தலைவர் நந்தகுமாரின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார், இன்று காலை மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று அவரது வீட்டிற்கு வந்த மத்திய கயிறு வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பழைய சரித்திரம் கோவையில் திரும்பி விடக் கூடாது என்றும், வன்முறையாளர்களுக்கு ஆதரவளிக்கும் அரசியல் கட்சிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.