பழனி அருகே மர்ம நபர்கள் சிலர் அ.தி.மு.க. கொடிக் கம்பத்தில் பா.ஜ.க. கொடி ஏற்றிய சம்பவம் பரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல்: பழனி அருகே மர்ம நபர்கள் சிலர் அ.தி.மு.க. கொடிக் கம்பத்தில் பா.ஜ.க. கொடி ஏற்றிய சம்பவம் பரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ளது மானூர் என்ற கிராமம் உள்ளது. ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இந்த கிராமத்தில் பேருந்து நிறுத்தத்திற்கு அருகே பல்வேறு கட்சிகளின் கொடி கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு அங்கு வந்த மர்ம நபர்கள், அ.தி.மு.க. கொடிக்கம்பத்தில் இருந்த அக்கட்சிக் கொடியை அகற்றி விட்டு பாரதிய ஜனதா கட்சியின் கொடியை ஏற்றியுள்ளனர். இரவோடு இரவாக விஷமிகளால் செய்யப்பட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் தொடர்பாக, அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த கீரனூர் காவல் துறையினர் பா.ஜ.க. கொடியை அகற்றினர். தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சியினர் சார்பில் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.