பா.ஜ.க.வின் கோவை மாவட்ட தலைவர் வீட்டில் நிறுத்தப்பட்ட காரில் தீ வைத்த மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி ஹோப் காலேஜ் சிக்னலில் பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவை: பா.ஜ.க.வின் கோவை மாவட்ட தலைவர் வீட்டில் நிறுத்தப்பட்ட காரில் தீ வைத்த மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி ஹோப் காலேஜ் சிக்னலில் பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்ட பா.ஜ.க தலைவர் சி.ஆர்.நந்தகுமார் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு இன்று அதிகாலை 3 மணிக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இது தொடர்பாக, அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராக்களின் உதவியுடன் போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், காருக்கு தீ வைத்துச் சென்ற மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய கோரி ஹோப் காலேஜ் சிக்னலில் பா.ஜ.க.வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 40-க்கும் மேற்பட்டோர் சுமார் அரை மணி நேரம் நடத்திய இந்த சாலை மறியல் காரணமாக அவினாசி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

மறியல் தொடர்பான தகவல் அறிந்த போலீசார், அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.