மாவட்ட தலைவர் காருக்கு தீ வைப்பு: கோவையில் பா.ஜ.க.வினர் சாலை மறியல்

பா.ஜ.க.வின் கோவை மாவட்ட தலைவர் வீட்டில் நிறுத்தப்பட்ட காரில் தீ வைத்த மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி ஹோப் காலேஜ் சிக்னலில் பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


கோவை: பா.ஜ.க.வின் கோவை மாவட்ட தலைவர் வீட்டில் நிறுத்தப்பட்ட காரில் தீ வைத்த மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி ஹோப் காலேஜ் சிக்னலில் பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்ட பா.ஜ.க தலைவர் சி.ஆர்.நந்தகுமார் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு இன்று அதிகாலை 3 மணிக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இது தொடர்பாக, அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராக்களின் உதவியுடன் போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், காருக்கு தீ வைத்துச் சென்ற மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய கோரி ஹோப் காலேஜ் சிக்னலில் பா.ஜ.க.வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 40-க்கும் மேற்பட்டோர் சுமார் அரை மணி நேரம் நடத்திய இந்த சாலை மறியல் காரணமாக அவினாசி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.



மறியல் தொடர்பான தகவல் அறிந்த போலீசார், அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...