கோவை வனப்பகுதிக்குள் காயமடைந்த காட்டு யானைக்கு மருத்துவம்

காயமடைந்த காட்டு யானைக்கு வனத்துறையினர் உணவுப் பொருட்கள் மூலம் மருந்துகளைக் கொடுத்து வருகின்றனர்.

கோவை: காயமடைந்த காட்டு யானைக்கு வனத்துறையினர் உணவுப் பொருட்கள் மூலம் மருந்துகளைக் கொடுத்து வருகின்றனர்.

கோவை மாவட்ட வனப் பகுதிக்குள் காட்டு யானை ஒன்று வாயில் காயத்துடன் உலா வருவதாக தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படியில் மாங்கரை வனப் பகுதிக்குள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் யானைக்கு காயம் ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தனர்.

தொடர்ந்து, அரசி உருண்டைகளில் காயத்திற்கான மருந்துகளைக் கலந்து அந்த காட்டு யானை வரும் பாதையில் வனத்துறை அதிகாரிகள் வைத்தனர். தற்போது அந்த கட்டு யானை உணவுகளை உட்கொண்டுள்ளது.

இது குறித்து கோவை மாவட்ட வன அலுவலர் சதீஷ் கூறுகையில், காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர் மனோகரன் மூலம் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் யானையின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். யானைக்கு பிடித்தமான உணவு வகைகளில் காயத்திற்கான மருந்தை கலந்து கொடுக்கப்பட்டது." என்றார்.

யானைக்கு வாய் பகுதியில் காயம் ஏற்பட்டிருப்பதால் அதனால் உணவுப் பொருட்களை கூட உண்ண முடியாது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...