கோவையில் பெண்களை ஏமாற்றிய கல்யாண மன்னன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது

கோவை உட்பட பல்வேறு நகரங்களில் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண மன்னன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

கோவை: கோவை உட்பட பல்வேறு நகரங்களில் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண மன்னன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 

கோவை வெள்ளலூர் கனகலட்சுமி நகரை சேர்ந்தவர் புருசோத்தமன். லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வந்தார். இவர் காந்திபுரத்தில் உள்ள திருமண தகவல் மையத்தில் இரண்டாவது திருமணத்துக்காக பதிவு செய்திருந்தார். அப்போது பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த குமுதவள்ளி என்ற 45 வயது பெண்ணும் அந்த தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார். 



திருமண தகவல் மையத்தை நடத்தி வந்த மோகன், வனஜா ஆகியோரது ஏற்பாட்டின் பேரில் புருஷோத்தமனுக்கும், குமுதவள்ளிக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்றது.  இந்த நிலையில், தொழிலை விரிவு படுத்துவதாகக் கூறிய புருசோத்தமன் வீட்டில் இருந்து ரூ.3 கோடி வரையில் கேட்டு, தனது மனைவி பெயரில் இருந்த அனைத்து சொத்துக்களையும் விற்று பணம் தருமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த குமுதவள்ளி வீட்டார் விசாரித்த போது அவருக்கு வேறு பல பெண்களுடன் திருமணம் நடைபெற்றது தெரியவந்தது.

இதை தொடர்ந்து, பெண் வீட்டார் அளித்த புகாரின் பேரில் போத்தனூர் காவல் நிலையத்தில் மோசடி, கூட்டுச்சதி உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், இந்த வழக்கு கோவை அனைத்து மகளிர் காவல் நிலையம் (கிழக்கு) மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில் புருசோத்தமன் மேலும் 7 பெண்களை திருமணம் செய்து கொள்வதாக மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. 

இரண்டாவது திருமணம் செய்ய திருமண தகவல் மையத்தில் பதிவு செய்து, வசதியான வீட்டு பெண்களை திருமணம் செய்ததாகவும், அதன் பின்னர் தொழில் நஷ்டம் உள்ளிட்ட காரணங்களை சொல்லி கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகவும் காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்தது.

கடந்த 2016 மற்றும் 2017 ஆண்டுகளில் சென்னை, கோவை நீதிமன்றங்களால் தண்டனை அளிக்கப்பட்டும், தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வந்ததால், மாநகர காவல்துறை ஆணையர் பெரியய்யா குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான ஆணையை சிறைக்கு அனுப்பி வைத்தார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...