திருப்பூரில் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி உயரழுத்த மின்கோபுரத்தில் ஏறி சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தற்கொலை மிரட்டல் விடுத்த மின்வாரிய ஒப்பந்த ஊழியரால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் : திருப்பூரில் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி உயரழுத்த மின்கோபுரத்தில் ஏறி சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தற்கொலை மிரட்டல் விடுத்த மின்வாரிய ஒப்பந்த ஊழியரால் பரபரப்பு ஏற்பட்டது.

தாராபுரம் சாலை செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவர், கடந்த 19 வருடமாக மின்வாரிய ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், திருப்பூர் எஸ்.வி. காலனி பகுதியில் உள்ள சுமார் 60 அடி உயரம் கொண்ட (110 கேவி) உயர் மின் அழுத்தம் உள்ள மின்கோபுரத்தில் ஏறி தனது பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் எனக் கூறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் ராஜகோபாலிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவரது பணி நிரந்தர கோரிக்கை குறித்த பரிசீலிப்பதாக உறுதியளித்ததின் பேரில், ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின் கோபுரத்தில் இருந்த ராஜகோபால் கீழே இறங்கி வந்தார். பின்பு, போலீசார் விசாரணைக்காக, அவரை காவல் நிலையம் அழைத்து சென்றனர். மின்வாரிய ஊழியரே மின்கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.