மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து திருப்பூரில் தமிழ்மாநில காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
திருப்பூர்: மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து திருப்பூரில் தமிழ்மாநில காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பிற்குப் பின் தமிழகத்திலும், குறிப்பாக திருப்பூரில் பின்னலாடைத்துறை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருப்பூரில் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் நடக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி சார்பில் திருப்பூர் மாநகராட்சி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, பல்வேறு நிபந்தனைகளை தளர்த்தக் கோரி தொழில்துறையினர் பலமுறை கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படவில்லை என்றும், மாநில அரசு பட்ஜெட்டில் சாமானிய மக்கள் பயன்பெறக்கூடிய திட்டங்கள் எதுவுமில்லை என அவர்கள் கூறினர்.
இதேபோல, தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி சார்பாக தமிழகம் முழுவதும் 32 வருவாய் மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நீலகிரியில் நடைபெற்ற போராட்டத்தின் போது, காவேரி மேலாண்மை அமைக்க வேண்டும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.