ரத யாத்திரை விவகாரம் : கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரியில் போராட்டம்

'ராம ராஜ்ய ரத யாத்திரை'யை தமிழகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரியில் சாலை மறியலில் ஈடுபட்ட மனித நேய மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

கோவை: 'ராம ராஜ்ய ரத யாத்திரை'யை தமிழகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரியில் சாலை மறியலில் ஈடுபட்ட மனித நேய மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

விஸ்வ இந்து பரிஷத் சார்பில் 'ராம ராஜ்ய ரத யாத்திரை' அயோத்தியில் தொடங்கி 5 மாநிலங்களைக் கடந்து இன்று தமிழகம் வருகிறது. இந்த யாத்திரை தமிழகத்திற்குள் வரக்கூடாது என்று வலியுறுத்தி பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் முஸ்லீம் அமைப்பினர் மற்றும் பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் போலீசார் அவர்களைக் கைது செய்து வருகின்றனர். 

இந்த நிலையில், திருப்பூர் புஷ்பா தியேட்டர் ரவுண்டானா அருகில் மனித நேய மக்கள் கட்சியினர் மற்றும் த.மு.மு.க. சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. ரத யாத்திரை தமிழகத்தில் வர அனுமதிக்கக் கூடாது என்று கோஷங்களை எழுப்பிய நிலையில் அங்கு சென்ற போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்தனர். 

இதேபோல், ரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று உதகை காபி ஹவுஸ் சதுக்கத்தில் மனித நேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், திராவிட கழகம் போன்ற பல்வேறு கட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு சென்ற போலீசார் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அவர்களை கைது செய்தனர். 

இதே போல், கோவை உக்கடம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட மனித நேய மக்கள் கட்சியினர் 100 பேரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...