கோவையில் மது போதையில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையில் செங்கல் சூலையில் பணியாற்றும் தொழிலாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
கோவை: கோவையில் மது போதையில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையில் செங்கல் சூலையில் பணியாற்றும் தொழிலாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
துடியலூரை அடுத்த மாங்கரை பகுதியில் உள்ள தனியார் செங்கல் சூலையில் வேலை செய்து வருபவர்கள் முத்துகுமார், ராஜேந்திரன், ஈஸ்வரன். இவர்கள் அதே செங்கல் சூலையில் உள்ள குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கி வருகின்றனர். இந்நிலையில், மூவரும் நேற்று இரவு அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்குச் சென்று மது அருந்தினர். அப்போது, மூவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
பிரச்சனையில் ஆத்திரமடைந்த முத்துக்குமார், ராஜேந்திரனை தாக்கி கீழே தள்ளிவிட்டார். இதில், ராஜேந்திரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இது குறித்து, தகவலறிந்த துடியலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர்.