தற்காலிக கடைகளால் வாரச்சந்தை கடை உரிமையாளர்கள் பாதிப்பு

கோவையில் பல்வேறு பகுதியில் வாரச்சந்தை என்ற பெயரில் தற்காலிமாக அமைத்து வருவதை தடுத்து, தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்குமாறு பாதிக்கப்பட்ட பாரம்பரிய வாரச்சந்தை கடை உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை: கோவையில் பல்வேறு பகுதியில் வாரச்சந்தை என்ற பெயரில் தற்காலிமாக அமைத்து வருவதை தடுத்து, தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்குமாறு பாதிக்கப்பட்ட பாரம்பரிய வாரச்சந்தை கடை உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் நூற்றாண்டு கால பாரம்பரியமான வாரச்சந்தை அரசு பேரூராட்சி, நகராட்சி சார்பில் நடைபெற்று வருகிறது. வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் அரசு செயல்பட்டு வரும் நிலையில், வாரச் சந்தை என்ற பெயரில் அமைக்கப்படும் தற்காலிக கடைகள் பெரும் வியாபார நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றன. 

இந்த நிலையில், வாரச்சந்தை என்ற பெயரில் தற்காலிமாக அமைத்து வருவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட பாரம்பரிய வாரச்சந்தை கடை உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 

அதில், கூறியிருப்பதாவது:- 

வியாபாரிகள் நடத்தும் கடை அருகே தற்காலிமாக கடை அமைத்து வாரச்சந்தை என்று செயல்படுவது வணிகர்கள் வியாபாரத்தைப் பாதிப்பு அடையச் செய்கிறது. மேலும், வியாபாரிகளுக்கு இடையூறாக செயல்பட்டு வருகின்றனர். இதனால், ஆயிரக்கணக்கான வியாபாரிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனை உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...