புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள அரசு விடுதியில் அமைக்கப்பட்டிருந்த பெரியாரின் சிலை அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டது.

புதுக்கோட்டை:  புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள அரசு விடுதியில் அமைக்கப்பட்டிருந்த பெரியாரின் சிலை அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. 

கடந்த 6-ம் தேதி பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா ஒரு தனது பேஸ்புக் பக்கத்தில், "தமிழகத்தில் இருந்து ஈ.வே. ராமசாமியின் சிலை அகற்றப்படும்" என்று பதிவிட்டிருந்தார். 

இதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து, திருப்பத்தூரில் பெரியார் சிலைகள் சேதப்படுத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பா.ஜ.க.வினர் இருவரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள அக்கட்சியின் அலுவலகம் மீது கடந்த 7-ம் தேதி இரண்டு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரதமர் உள்ளிட்ட முக்கிய நபர்கள் இந்த சம்பவங்களுக்கு வருத்தம் தெரிவித்தனர். 

சிலை சர்ச்சை சற்றே ஓய்ந்திருந்த நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள அரசு விடுதியில் அமைக்கப்பட்டிருந்த பெரியார் சிலையை சில மர்ம நபர்கள் சேதப்படுத்திச் சென்றனர். நேற்று இரவு அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பெரியார் சிலையின் தலைப் பகுதியை தனியாக பெர்யர்த்து எடுத்து அட்டூழியத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக ஆலங்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிலையை சேதப்படுத்திய நபர்களைத் தேடி வருகின்றனர். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...