குடிபோதையில் வாகனம் ஓட்டி சாலையில் விபத்து ஏற்படுத்திய நைஜீரியர்களை முற்றுகையிட்ட பொதுமக்கள்

திருப்பூரில் குடிபோதையில் வாகனம் ஓட்டி சாலையில் விபத்து ஏற்படுத்திய நைஜீரியர்களை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

திருப்பூர்: திருப்பூரில் குடிபோதையில் வாகனம் ஓட்டி சாலையில் விபத்து ஏற்படுத்திய நைஜீரியர்களை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.



பெத்திசெட்டிபுரம் பகுதியில் நைஜீரியர்கள் தங்கி பின்னலாடை நிறுவனங்கள் அமைத்து தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் இருந்த நைஜீரியர்கள் சிலர் குடிபோதையில் வாகனம் ஓட்டி அவ்வழியே கணவருடன் வந்த கர்ப்பிணி பெண் மீது மோதி விபத்து ஏற்படுத்தினர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 



மேலும், நைஜீரியர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவதாக கூறி விபத்து ஏற்படுத்திய நைஜீரியர்களை பொதுமக்கள் தாக்கியதோடு அவர்கள் பணிபுரியும் பின்னலாடை நிறுவனத்தை முற்றுகையிட்டும் போரட்டத்தில் ஈடுபட்டனர். 



இது தொடர்பான தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் இருந்து நைஜீரியர்களை மீட்டு விசாரணைக்காக வடக்கு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...