உடல்நலக்குறைவால் சசிகலா கணவர் நடராஜன் மரணம்

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சசிகலாவின் கணவர் நடராஜன் உயிரிழந்தார்.


சென்னை: உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சசிகலாவின் கணவர் நடராஜன் உயிரிழந்தார்.

கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயல்படாமல் போனதால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உயிருக்கு ஆபத்தான நிலையில் சசிகலாவின் கணவர் நடராஜன் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தஞ்சாவூரைச் சேர்ந்த இளைஞரின் உறுப்புகள் தானமாக பெற்று அவருக்கு பொருத்தப்பட்டதையடுத்து சற்று உடல் நலன் தேறினார்.

பின்னர், உறவினர் ஒருவரின் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஞாயிறன்று திடீரென நடராஜனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அவர் ஏற்கனவே சிகிச்சை பெற்ற சென்னை பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நடராஜன் இன்று அதிகாலையில் உயிரிழந்தார்.



கணவர் மரணமடைந்ததால் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா 15 நாட்கள் பரோல் வேண்டி விண்ணப்பித்துள்ளார். ஏற்கனவே சசிகலா தரப்பில் இருந்து பரோல் கோரப்பட்டதும், சிறை நிர்வாகம் அதை நிராகரித்ததும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...