திருப்பூரில் ஆட்டோ ஓட்டுநரை வழிமறித்த 8 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடியது.
திருப்பூர்: திருப்பூரில் ஆட்டோ ஓட்டுநரை வழிமறித்த 8 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடியது.
திருப்பூர் பவானி நகர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (23). ஆட்டோ ஓட்டுநராக பணி புரிகிறார். இவரது பாலமுருகனின் தம்பி வெங்கடேஷ் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்தவர்களுக்கும் இடையே முன் பகை இருந்ததாக தெரிகிறது. இதில் பாலமுருகனும் தலையிட்டுள்ளார்.
இந்த சூழலில், நேற்று மாலை பவானி நகர் பகுதியில் சென்ற பாலமுருகனை வழிமறித்த 8 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் முகம், தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து, அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, அப்பகுதியில் பதிவான சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.