குடியிருப்பு வளாகம் முன்பு குப்பைத் தொட்டியை வைத்த மாநகராட்சி : வாக்குவாதம் செய்த பொதுமக்கள்

கோவை தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட போத்தனூர் பகுதியில் அமைந்துள்ள சாய் அமரந்தா குடியிருப்பு வளாகத்தின் வாசலை அடைத்து, மாநகராட்சியால் வைக்கப்பட்ட குப்பைத் தொட்டியை அகற்ற வேண்டி, குடியிருப்புவாசிகள் மாநகராட்சி ஊழியர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: கோவை தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட போத்தனூர் பகுதியில் அமைந்துள்ள சாய் அமரந்தா குடியிருப்பு வளாகத்தின் வாசலை அடைத்து, மாநகராட்சியால் வைக்கப்பட்ட குப்பைத் தொட்டியை அகற்ற வேண்டி குடியிருப்பு வாசிகள் மாநகராட்சி ஊழியர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சொத்து வரி, தண்ணீர் வரி என மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்த தவறிய நபர்களின் குடியிருப்பு மற்றும் கடைகளின் வாசலில் மாநகராட்சி நிர்வாகம் குப்பைத் தொட்டிகளை வைத்து வருகிறது. அந்த வகையில், கடந்த சனிக்கிழமை அன்று, சுமார் 120 குடியிருப்புகள் அமைந்துள்ள சாய் அமரந்தா குடியிருப்பு வளாகத்தில் உள்ள 10 நபர்கள் முறையாக வரி செலுத்தாததால் குடியிருப்பின் இரண்டு வாசல்களிலும் குப்பைகள் நிறைந்த குப்பைத் தொட்டிகளை வைத்துச் சென்றனர் மாநகராட்சி ஊழியர்கள்.

இந்த நடவடிக்கையால், வரி செலுத்தாத சிலரை தண்டிப்பதாக கூறி, முறையாக வரி செலுத்தும் அனைவரையும் மாநகராட்சி நிர்வாகம் தண்டித்து விட்டதாக அப்பகுதியில் குடியிருப்போர் குற்றம் சாட்டினர்.

இது குறித்து அந்த குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் கூறுகையில், "வரி செலுத்தாத நபர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் அளிக்கப்படவில்லை. அவர்கள் தற்போது இங்கு தான் வசிக்கிறார்களா? என்று விசாரிக்கவுமில்லை. இரு தினங்களுக்கு முன் குடியிருப்பு வளாகத்தின் இரண்டு வாயில்களையும் அடைத்தவாறு துர்நாற்றம் வீசும் குப்பைத் தொட்டிகளை வைத்து விட்டுச் சென்றுவிட்டனர். இதனால், வாசலுக்கு அருகில் குடியிருப்போர் கடும் சிக்கல்களை சந்தித்து வந்தனர். மேலும், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சிரமப்பட்டு வாசலைக் கடக்க வேண்டியிருந்தது." என்றார்.

இந்நிலையில், நேற்று காலை அந்த பகுதிக்கு வந்த மாநகராட்சி ஊழியர்களை முற்றுகையிட்ட குடியிருப்பு வாசிகள், குப்பைத் தொட்டியை அகற்றுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

"தண்டனை அளிப்பதாகக் கூறி, குடியிருப்பு வளாகத்தின் வாசலை மறைத்து குப்பைத் தொட்டி வைத்தால் அவசரத்திற்கு ஓர் ஆம்புலன்ஸ் உள்ளே வர வேண்டும் என்றால், எப்படி வர முடியும்? முறையாக வரி செலுத்தும் மற்றவர்களும் தண்டனை பெற வேண்டுமா? குப்பைத் தொட்டி வைப்பதற்கான உத்தரவை ஏன் மாநகராட்சி ஊழியர்கள் காட்ட மறுக்கின்றனர்?" என்ற பல்வேறு கேள்விகளை அடுக்கி குமுறலை வெளிப்படுத்தினார் மற்றொரு குடியிருப்புவாசி.

மாநகராட்சி ஊழியர்களிடம் நடந்த வாக்குவாதத்தைத் தொடர்ந்து, வாசலை ஆக்கிரமித்திருந்த குப்பைத் தொட்டிகள் மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது.

வரி வசூல் செய்வதில் கடுமையான நடவடிக்கைகள் தேவைதான். ஆனால், அவை முறையாக வரி செலுத்துபவர்களை எந்த விதத்திலும் பாதிக்கக் கூடாது என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...