கோவையில் சுகாதாரமற்ற பணிபுரிவோர் தேசிய கணக்கெடுப்பு பணி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவையில் சுகாதாரமற்ற பணிபுரிவோர் தேசிய கணக்கெடுப்பு பணி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து சுகாதாரமற்ற பணிபுரியும் பணியாளர்கள் கணக்கெடுப்பு (மனித கழிவுகளை மனிதனே அகற்றும் பணியாளர்கள்) பிரிவு2 (1)(ப) எம்.எஸ். சட்டம் 2013-ன் அடிப்படையில் அடையாளப்படுத்தப்பட்ட உலர் கழிவுகளை கைகளினால் சுத்தம் செய்தல், திறந்த வெளியில் சுகாதாரமற்ற கழிப்பிடங்களில் உள்ள மனித கழிவுகளை அகற்றுதல் கழிப்பறையுடன் இணைக்கப்பட்ட ஒற்றைக் குழியில் உள்ள கழிவுகளை கைகளினால் சுத்தம் செய்தல் போன்ற பணிகளில் ஈடுபடும் கோவை மாவட்டத்தில் வசிக்கும் பணியாளர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம்.
மேலும், முகாம் நடைபெறும் இடங்கள் கோவை மாவட்டத்திலுள்ள 37 பேரூராட்சி அலுவலகங்களில் (21.03.2018 மற்றும் 22.03.2018), கோவை மாநகராட்சியிலுள்ள ஐந்து மண்டல அலுவலகங்களில் (23.03.2018 மற்றும் 24.03.2018), நகராட்சிகள் (பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம்) தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகள் (27.03.2018 மற்றும் 28.03.2018), அனைத்து ஊராட்சி அலுவலகங்களில் (27.03.2018 மற்றும் 28.03.2018) ஆகிய நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறுகிறது.
பதிவு செய்வதற்கு கொண்டு வரவேண்டிய ஆவணங்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் அசல், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை. மேலும், படிவங்கள் முகாம் அலுவலகங்களில் வழங்கப்படும். இதுவரை தங்களது பெயர்களைப் பதிவு செய்யாத தொழிலாளர்கள் தங்களது பெயரை பதிவு செய்து இம்முகாமில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.