பா.ஜ.க., மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் போது, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

பா.ஜ.க., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மக்களவையில் நாளை நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருகின்றன. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது. மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளன.

இன்றைய கூட்டத்தின் போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழக எம்.பி.க்களும், சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி ஆந்திர எம்.பி.க்களும் கடும் அமளியில் ஈடுபட்டதால் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற முடியவில்லை. எனவே, மக்களவை நாளை (மார்ச் 20) சுமூகமாக நடைபெற்றால், இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் தற்போது 536 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இதில், 274 உறுப்பினர்களைக் கொண்ட பா.ஜ.க.,வுக்கு, கூட்டணி கட்சிகளின் ஆதரவும் உள்ளதால் பெரும்பான்மையை நிரூபிப்பதில் சிக்கல் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், மத்திய அரசின் முழு பலத்தையும் காட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை பா.ஜ.க., பெற வேண்டியிருக்கும். ஆனால், சிவசேனா, ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி உள்ளிட்ட சில பா.ஜ.க.,வின் கூட்டணி கட்சிகள் அதிருப்தியில் உள்ளன. இதனால், இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் பலன் எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமின்றி, பா.ஜ.க., மீது அதிருப்தியில் உள்ள அதன் கூட்டணி கட்சிகளுக்கும் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
பா.ஜ.க., மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாளை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த வாக்கெடுப்பின் போது ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.