சேலத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ராஜேஸ்வரி என்ற கோவில் யானைக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம்: சேலத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ராஜேஸ்வரி என்ற கோவில் யானைக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாநகரில் பிரசித்திபெற்ற சுகவனேசுவரர் கோவிலில் ராஜேஸ்வரி என்ற 38 வயது யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானை குட்டியாக வாங்கும் போதே அதன் இடதுகால் ஊனமாக இருந்துள்ளது. ஆரம்பத்தில் இந்த யானை அலங்கரிக்கப்பட்டு சாமி ஊர்வலத்தின் போது அழைத்து வரப்பட்டது. யானை வளர, வளர அதனால் நீண்ட தூரம் நடக்க முடியவில்லை. இதையடுத்து, யானை கோவில் முன்பு நின்று, அங்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது. அவ்வப்போது யானைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கோவில் பின்புறத்தில் உள்ள காலி இடத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது.

பின்னர், கோரிமேட்டில் உள்ள கோவிலுக்கு சொந்தமான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையை ஒரு பாகனும், உதவி பாகனும் பராமரித்து வருகின்றனர். இடது கால் ஊனம் காரணமாக யானை பல ஆண்டுகளாக வலது காலில் நின்றதால் தற்போது அந்த காலில் வாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், யானையால் நிற்க முடியவில்லை. கடந்த சில நாட்களாக ராஜேஸ்வரி யானை எழுந்து நிற்க முடியாமல் படுத்தே கிடக்கிறது. மேலும், யானை சரிவர உணவும் எடுத்துக்கொள்வதில்லை.
யானைக்கு சேலம் கால்நடை மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கோவில் நிர்வாக அதிகாரிகளும் யானைக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளைக் கண்காணித்து வருகின்றனர். யானைக்கு வழங்க வேண்டிய உணவு பொருள்கள் மற்றும் அதன் தரம், மருந்துகள் ஆகியவற்றை அலட்சியம் காட்டப்பட்டதின் விளைவாகவும், தற்போது யானை உயிருக்குப் போராடி வருகிறது.
எனவே, அவசர அவசியம் கருதி கோவை மண்டல வன கால்நடை மருத்துவர்களை உடனடியாக அனுப்பி வைத்து யானை இராஜேஸ்வரியை பரிசோதித்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டுமென்ற கோரிக்கை பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.