மச்சிக்கொல்லி பாக்கம் சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் மனு

நீலகிரி மாவட்டம் தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட மச்சிக்கொல்லி பாக்கம் சாலையை சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட மச்சிக்கொல்லி பாக்கம் சாலையை சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கூடலூர் தாலூகாவிற்கு உட்பட்ட தேவர்சோலை பேரூராட்சி எல்லைக்குட்பட்ட 4-ம் வார்டு மச்சிக்கொல்லி முதல் புழம்பட்டி வரையிலான சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரமுள்ள சாலையை சீரமைத்து 20 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இதனால், அந்த சாலை தற்போது குண்டும், குழியுமாக இருப்பதால் அப்பகுதி மக்கள் நடக்கவும், வாகனங்கள் இயக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்தச் சாலை வட்டிகொல்லி, பீச்சனக்கொல்லி மற்றும் செம்பக்கொல்லி ஆகிய ஆதிவாசி காலனிகளுக்கு செல்லும் முக்கிய சாலையாக இருந்து வருவதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், நோயாளிகள், பணிக்கு செல்பவர்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

மேலும், சாலையை சீரமைக்காமல், சீரமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இந்த நிலையில், பழுதடைந்துள்ள இந்த சாலையில், அரசு பேருந்து மற்றும் இதர வாகனங்கள் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இயக்க முடியாத நிலை உள்ளதால், இந்த சாலையை உடனடியாக சீரமைத்து தரக்கோரி அப்பகுதி மக்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...