லிங்காயத் சமுதாயத்தினரை தனிமதத்தினராக அங்கீகரித்த கர்நாடக அரசு

கர்நாடகா சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், லிங்காயத் சமுதாயத்தினரை தனி மதத்தினராக அங்கீகரித்து அம்மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கர்நாடகா சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், லிங்காயத் சமுதாயத்தினரை தனி மதத்தினராக அங்கீகரித்து அம்மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

800 ஆண்டுகளுக்கு முன்பு பசவண்ணா என்பவரால் தான் லிங்காயத் மதம் உருவாக்கப்பட்டது. லிங்காயத்துகள் தங்களை வீர சைவர்கள் என்று அழைத்துக் கொள்கின்றனர். சிவனை வழிபடும் லிங்காயத்துகள் வேதம், சாதி அமைப்புகளில் நம்பிக்கை இல்லாதவர்கள். கர்நாடகா மாநிலத்தில் தான் பெரும்பாலும் லிங்காயத்துகள் கணிசமாக உள்ளனர். லிங்காயத்துக்குச் சொந்தமான வீர வைச மடங்கள் கர்நாடகா முழுவதும் வியாபித்துள்ளன. வீர சைவ மடங்கள் கர்நாடகாவில் அரசியல், சமூக பிரச்சனையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அண்மை காலங்களில் இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டு உள்ள புதிய மதம் லிங்காயத் தான். 12-ம் நூற்றாண்டில் வடகர்நாடகத்தில் உருவான வசனக்காரர்கள் இயக்கம் தான் லிங்காயத். வசனக்காரர்கள் இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட அனைத்து சாதியினரும் அதில் இணைந்தனர். வர்ணாசிரமக் கோட்பாட்டை தகர்த்து எறிந்து சகோதரத்துவத்தை வசனகக்காரர்கள் நிலைநாட்டினர். கர்நாடகா சட்டப்பேரவைக்கு மே மாதம் தேர்தல் நடக்க உள்ள நிலையில் புதிய மதம் அறிவித்துள்ளார். லிங்காயத்துகளின் வாக்குகளைக் கவர முதல்வர் சித்தராமையா இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும், லிங்காயத் மதத்தை அங்கீகரிக்குமாறு மத்திய அரசுக்கு கர்நாடக அரசு பரிந்துரைத்துள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...