காவிரி மட்டுமல்ல, கோதாவரியும் தமிழகத்திற்கு வரும் - தமிழிசை சவுந்தரராஜன்

காவிரி மட்டுமல்லாது, கோதாவரியும் தமிழகத்திற்கு வரும் என்றும், அதுவே பா.ஜ.க.வின் திட்டம் என்றும் அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.


கோவை: காவிரி மட்டுமல்லாது, கோதாவரியும் தமிழகத்திற்கு வரும் என்றும், அதுவே பா.ஜ.க.வின் திட்டம் என்றும் அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :- 

திருப்பதியில் பணம் எண்ணுவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ப.சிதம்பரம் கருத்து கண்டனத்திற்குரியது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை. இதனை பா.சிதம்பரம் கொச்சைப்படுத்த வேண்டாம். ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை தெரியாதவரா பா.சிதம்பரம்? மூன்று மாதத்தில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் இருந்து இந்தியா மீண்டு இருக்கிறது.

பணத்தை எண்ண அதிக அனுபவம் வேண்டும் என்றால், திகார் சிறையில் உள்ள கார்த்திக் சிதம்பரத்திடம் கொடுத்து எண்ணச் சொல்லலாம். பா.ஜ.க. அ.தி.மு.க.வை இயக்குகிறது என்று கூறுவது தவறு. நம்பிக்கையில்லா தீர்மானத்தை அனைத்து கட்சிகளும் ஏன் ஆதரிக்க வேண்டும். மேலும், இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது ஆட்சியில் இருந்த தி.மு.க. ஏன் அப்போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவில்லை? 

கோதாவரி 

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக துறையைச் சார்ந்த அமைச்சர்கள் பணிகளை தொடங்கிவிட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இன்னும் கால அவகாசம் இருக்கின்றது. கால அவகாசம் முடியும் வரை காத்திருப்பது என்ற தமிழக அரசின் முடிவு சரியானது. 29-ம் தேதிக்குள் மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்போம் என்ற துணை முதலமைச்சரின் கருத்து எதார்த்தமானது. காவிரி மட்டுமல்ல, கோதாவரியும் தமிழகம் வரும். அது தான் பா.ஜ.க.வின் திட்டம் 

ராகுல் காந்தி 

அழகிய தமிழ் மொழி பற்றி பேசும் ராகுல் காந்தி, தமிழ் மக்களுக்கு வஞ்சனை இன்றி தண்ணீரை திறந்து விடுங்கள் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவிடம் ஏன் கூறவில்லை. காங்கிரஸ் இந்த பிரச்சினையில் அரசியல் நாடகம் ஆடுகிறது.  தமிழ் மொழி பேசி இலங்கையில் தமிழ் மக்களைக் கொன்றதும், மொழிப்போர் தியாகிகளை கொன்றதும் காங்கிரஸ் கட்சி தான். இலங்கையில் தமிழர்களை கொலை செய்வதை தடுக்காத ராகுல் காந்தி அரசியல் பிழைப்பிற்காக தமிழ் மொழி குறித்து பேசுகின்றார்.

இவ்வாறு அவர் பேசினார். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...