காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அழுத்தம் தர வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியதற்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அவகாசம் உள்ளது என்று தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பதிலளித்துள்ளார்.
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அழுத்தம் தர வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியதற்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அவகாசம் உள்ளது என்று தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பதிலளித்துள்ளார்.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 15-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அன்று மாலையே சட்டசபை சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
அதன்பிறகு, 16, 17, 18-ந் தேதிகளில் 3 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில், சட்டசபை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடியது. காலை 10 மணிக்கு சட்டப்பேரவை தொடங்கியது. மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் சட்டப்பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கேள்வி நேரம் நடைபெற உள்ளது. கேள்வி நேரம் முடிந்ததும், பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது.
விவாதம் தொடங்கியதும், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறினார். இதற்கு பதிலளித்த தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இன்னும் அவகாசம் உள்ளது. வரும் 29-ம் தேதி வரை பொறுத்திருப்போம்.' என்றார்.