மேட்டுப்பாளையத்தில் 36 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை: மேட்டுப்பாளையத்தில் 36 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் முன்னதாகவே தொடங்கிய கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்தது. "மார்ச் மாதத்தின் தொடக்கத்திலேயே இந்த வெயில் என்றால், மே மாதத்தில் எப்படி இருக்கும்?" என்ற பரவலான பேச்சு கோவை மக்களிடையே கேட்க முடிந்தது. இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கோவையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
மாநகர பகுதிகளில் நேற்று மழை இல்லாத போதிலும், ஊரக பகுதிகளில் மழை பெய்துள்ளது. நேற்று பெய்த மழை அளவின் படி மேட்டுப்பாளையத்தில் 36 மி.மீ மழையும், பெரியநாயக்கன்பாளையத்தில் 26 மி.மீ மழையும், வால்பாறையை அடுத்த சின்கோனா மற்றும் சின்னக்கல்லார் பகுதிகளில் தலா 2 மி.மீ மழையும் பதிவாகியுள்ளதாக கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதே போல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்து வரும் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும், அதன் பிறகு இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் என்றும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.