உதகையில் 4 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை

உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 4 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது.

நீலகிரி: உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 4 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. 

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி, கோடநாடு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை முதலே உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெயில் வாட்டி வந்தது. பிற்பகல் முதல் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.



மேலும் பாதாள சாக்கடையில் இருந்து சாலைகளில் கழிவு நீர் வெளியேறியதால் பாதசாரிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். படகு இல்ல சாலை சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக இருப்பதால் மழை நீர் தேங்கி நின்றது. இதனால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

தற்போது பெய்து வரும் மழையால் காய்கறிகள் மற்றும் தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

உதகை நகரின் மைய பகுதியில் ஓடும் கோடப்மந்து கால்வாய் முறையாக தூர்வாரப்படாததால் வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும், சாலைகளிலும் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். தென்மேற்கு பருவமழை துவங்குவதற்கு முன் கோடப்மந்து கால்வாயை முறையாக தூர்வார வேண்டும் என நீலகிரி மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...