ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிலுவையை சுமந்து ஊர்வலமாக சென்ற பொதுமக்கள்

ஈஸ்டர் பண்டிகையையொட்டி இன்று உதகை தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் இருந்து குருசடி திருத்தம் வரை ஆயிரக்கணக்கான கிறித்துவர்கள் சிலுவையைச் சுமந்து இயேசுவின் துதிகளை பாடியவாறு ஊர்வலமாக சென்றனர்.

நீலகிரி: ஈஸ்டர் பண்டிகையையொட்டி இன்று உதகை தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் இருந்து குருசடி திருத்தம் வரை ஆயிரக்கணக்கான கிறித்துவர்கள் சிலுவையைச் சுமந்து இயேசுவின் துதிகளை பாடியவாறு ஊர்வலமாக சென்றனர்.

இயேசு கிறிஸ்து உயிர் நீத்த மூன்றாம் நாள் மறுபடியும் உயிர்த்தெழுந்து வந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக கிறித்துவர்கள் கொண்டாடி வருகின்றனர். இயேசு கிறிஸ்து உயிர் நீத்த போது அவர் மக்களுக்காக பாடுபட்டு சிலுவையில் அறையப்பட்டார். இந்த மாதத்தை கிறித்துவர்கள் தவக்காலமாக அனுசரித்து வருகின்றனர்.

இதனையொட்டி ஆண்டுதோறும் கிறித்துவர்களின் தவக்கால பரிகார பவனி நடைபெற்று வருகிறது. இந்தாண்டு இன்று உதகை தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் இருந்து தென்னகத்தின் கல்வாரி என்றழைக்கப்படும் காந்தல் குருசடி திருத்தலம் வரை ஆயிரக்கணக்கான கிறித்துவர்கள் சிலுவை சுமந்தபடி ஊர்வலமாகச் சென்றனர்.



ஊர்வலத்தின் போது இயேசுவின் பாடுகளை தியானித்தபடி சென்றனர். மேலும், இந்தாண்டு இறக்கத்தின் ஆண்டாக திருத்தந்தை அறிவித்துள்ளதால் இறைவனின் இறக்கத்தை அனைவரும் உணர்ந்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த பரிகார பவனியின் நோக்கமாக உள்ளதாக மறை மாவட்ட ஆயர் அமுல்ராஜ் தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து உதகை மறை மாவட்ட ஆயர் அமுல்ராஜ் தலைமையில் கூட்டு பாடற் திருப்பலி நடைபெற்றது. முடிவில் அன்பின் விருந்து நடைபெற்றது.



Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...