தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் தருமபுரி மாவட்ட வேளாண் அறிவியல் நிலையத்திற்கு பிரதம மந்திரி விருது வழங்கப்பட்டது.
தருமபுரி: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் தருமபுரி மாவட்ட வேளாண் அறிவியல் நிலையத்திற்கு பிரதம மந்திரி விருது வழங்கப்பட்டது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் வேளாண் அறிவியல் நிலையம் தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த வேளாண் அறிவியல் நிலையத்திற்கு ராஷ்டிரிய கிரிஷி விக்யான் புரஸ்கர் விருது டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். சிறந்த சேவை அடிப்படையில் இந்த விருது வழங்கப்பட்டது.
இவ்விருதை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் விரிவாக்கக் கல்வி இயக்குநர் பிலிப் மற்றும் தருமபுரி மாவட்ட வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.